ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர மடம், விழுப்புரம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதிகளான பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் பிறந்த ஊரான விழுப்புரத்தில் ஸ்ரீ சங்கர மடம் அமைந்திருக்கிறது.
விழுப்புரம் நகரமானது திண்டிவனம் நகரத்தை தாண்டி சென்னை திருச்சி மற்றும் இதர தென் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. பிற நகரங்களிலிருந்து இந்நகரத்திர்க்கு பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து வசதிகள் உள்ளன. மஹாஸ்வாமிகளின் பாதுகைகள் ஸ்ரீமடத்தில் உள்ளன. 2004 ல் கோபுரம் எழுப்பி கும்பாபிஷேகமும் நடைப்பெற்றது. தென் தமிழகத்திற்க்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளும் இங்கு முகாமிட்டு ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வர பூஜையினை பலமுறை நடத்தி உள்ளார்கள்.
ஸ்ரீ மடத்தில் கிருஷ்ண யஜுர் பாடசாலை இயங்கி வருகிறது. பல மாணவர்கள் இந்த மடத்தில் பயின்று தங்களுடைய வேத அதியாயனத்தை பூர்த்தி செய்துள்ளனர்.
விழுப்புரம் ஸ்ரீ சங்கர மடத்தின் கிளை முகவரி:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம்
கிழக்கு ஹனுமார் கோயில் தெரு,
காமராஜ் சாலை அருகில்,
விழுப்புரம், தமிழ்நாடு.
Paduka Mandir |
Veda Class in progress |